உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; "இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டு விடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல; அது உற்சாகம் அளிக்கக் கூடியதும் கூட; வேலை மட்டுமின்றி செல்வாக்கு, ஊக்கத்தையும் திறன் வழங்குகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
போட்டி நிறைந்த உலகில் திறனை வளர்த்தல், மேம்படுத்தல் மிக முக்கியம். திறமை மற்றும் கற்றலுக்கான ஆர்வம்தான் இளைஞர்களின் மிகப்பெரிய பலம். திறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம் போன்றது. திறமையை நம்மிடமிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது." இவ்வாறு பிரதமர் பேசினார்.