Published on 17/10/2018 | Edited on 17/10/2018

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மாலை சபரிமலை நடை திறக்கவிருக்கும் நிலையில் அங்கு பரபரப்பு கூடியது.
இந்நிலையில் நிலக்கல் பகுதி வழியாக செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் மினுட், ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளர்களின் வாகனத்தை தாக்கிய போராட்டக்காரர்கள் பெண் செய்தியாளர் பூஜா மற்றும் சரிதாவை தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு சென்ற நிலக்கள் போலீசார் ரிபப்ளிக் டிவி பெண் பத்திரிகையாளர் பூஜா மற்றும் நியூஸ் மினுட் செய்தியாளர் சரிதாவை மீட்டு நிலக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.