![Vijay Vasant MP takes charge in Tamil](http://image.nakkheeran.in/cdn/farfuture/KtH4qSV5WYa4gKV6I1yKA2tinha-D7ZpNYXmRou-ebI/1626679600/sites/default/files/inline-images/vj2.jpg)
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி, அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மறைந்த மாநிலங்களவை எம்.பிக்களுக்கும், ஆளுமைக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடங்கியது. இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வின் போது, மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் வசந்த் எம்.பி -ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று துவங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தமிழில் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பதவியேற்றபின் "பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க" என்று கூறினார்.