Published on 17/08/2018 | Edited on 17/08/2018
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/iJwfWtaC4II9j4Fy50msK-O8VQzE71iKHUmDZVPYRsg/1534492658/sites/default/files/inline-images/stalin_31.jpg)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) உடல்நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/XgmZgGWkYeEndDAAEQs-JZG1mB2MGRjUl5xp3EiGWB4/1534492690/sites/default/files/inline-images/kani.jpg)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி எம்.பியும் இன்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தயாநிதிமாறன், திருச்சி சிவா எம்.பி உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.