Skip to main content

கரோனா தடுப்பு- மத்திய அமைச்சர்கள் ஆலோசனை !

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்த போதிலும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. 
 

union ministers discussion about coronavirus prevention


இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்