ஏர்டெல் நிறுவனத்தின் பிளாட்டினம் திட்டம் மற்றும் வோடபோன் ஐடியாவின் REDX ஆகிய பிரீமியம் திட்டங்களுக்கு ட்ராய் அமைப்பு தடை விதித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் REDX என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் ரூ.999 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% கூடுதல் வேகத்துடனான அதிவேக இணையச் சேவை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல கடந்த வாரம் ஏர்டெல் அறிமுகப்படுத்திய பிளாட்டினம் திட்டத்தில், மாதத்திற்கு ரூ.499 அல்லது அல்லது அதற்கு மேல் செலுத்தும் பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வேகத்தில் 4ஜி இணையச் சேவை வழக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த சூழலில், இந்தத் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு ட்ராய் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்களால், சாதாரண திட்டங்களில் இயங்கும் வாடிக்கையாளர்களின் சேவைத் தரம் பாதிக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த சரியான வரையறைகள் இல்லை எனவும் ட்ராய் தெரிவித்துள்ளது.