Skip to main content

ப்ளஸ் 2 தேர்வு முடிவில் குளறுபடி!!! 17 மாணவ, மாணவிகள் தற்கொலை...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

கடந்த ஏப்ரல் 18ம் தேதி தெலுங்கானாவில், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் 17 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். 

 

exam result


தெலுங்கானாவில் கடந்த சில நாட்களுக்குமுன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. +2 தேர்வில் மொத்தம் மதிப்பெண் 1000 ஆகும். ஆனால் 1000க்கு 750 முதல் 900 வரை எடுத்திருந்த மாணவ, மாணவிகளில் பலருக்கும் தேர்ச்சி பெறவில்லை என வந்திருந்தது. இப்படியாக சுமார், 3 இலட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளில் 17 பேர் விஷமருந்தியும், தூக்கிட்டும், தீயிட்டுக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர். 
 

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளிலேயும் சிலர் நாங்கள் நன்றாக எழுதியிருக்கின்றோம். ஆனாலும் மதிப்பெண் சரியாக வரவில்லை எனக்கூறியுள்ளனர். இதையடுத்து தெலுங்கானா அரசு கட்டணமின்றி விடைத்தாள் நகலைப் பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசாணை வெளியிட்டது. இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளில் நிர்வாகிகள் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து மனு அளித்தனர். கல்வித் துறை அமைச்சரை பணிநீக்கம் செய்ய வேண்டும், மறுமதிப்பீடு செய்து விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்