இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது. இதனைத்தொடர்ந்து பெகாசஸ் ஹேக்கிங் குறித்து விசாரித்த விசாரணை குழு, தற்போது உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதோடு, விசாரணை முடிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது.
இதனையடுத்து உச்சநீதிமன்றம், பெகாசஸ் வழக்கை நாளை மீண்டும் விசாரிக்க இருந்தநிலையில், தற்போது மத்திய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையேற்று, வழக்கு விசாரணையை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.