Skip to main content

என்.டி.ஏ வளாகத்தில் நுழைந்த மாணவர் அமைப்பு; தடியடி நடத்திய போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Student body entering NDA campus; Police batoned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளே புகுந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. நீட் முறைகேட்டை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் மாணவர் அமைப்பு மீது தடியடி நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நோட்டமிட்ட கடப்பாரை திருடர்கள்; தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Thieves of Noted Homes;viral cctv

கடலூரில் நள்ளிரவில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சில நபர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பிடித்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஐந்து பேரையும் உட்கார வைத்திருக்கும் வீடியோ காட்சிகளும், கடப்பாரையுடன் கொள்ளை அடிப்பதற்காக வேவு பார்க்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story

பணம் இரட்டிப்பு மோசடி;3 பேர் கைது

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Fraud by claiming to double money; 3 people arrested

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றி பெற்ற சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூர் சின்னத்தம்பி பாளையம் அண்ணமார் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (54) அப்பகுதியில் மளிகை கடை, விவசாயம், செங்கல் சூளை வைத்துள்ளார். வருவாயின் அளவு சிறியதாக இருந்ததால் அதனை இரட்டிப்பாக்க எண்ணினார். அப்போது அவருக்கு மூர்த்தி, சேகர் என்ற இருவர் அறிமுகமாகினர். தாங்கள் அளிக்கும் பணத்தை போன்று இன்னொரு மடங்கு பணம் வழங்கப்படும் என்று முத்துசாமியிடம் உறுதியளித்து நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதனை நம்பிய முத்துசாமி கடந்த 23 அதிகாலை 3:00 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் பூக்கடை அருகே ரூ.20 லட்சம் ரொக்கத்தை மூர்த்தி, சேகர் அறிமுகப்படுத்திய நபர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் ரூ.30 லட்சம் இருப்பதாக கூறி கொடுத்த சூட்கேசை வாங்கிக் கொண்டு அந்தியூர் சென்று முத்துசாமி அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்தது போலியான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மூர்த்தி, சேகரிடம் கேட்க முற்பட்டார். அப்போது அவர்கள் இருவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு டவுன் போலீசில் முத்துசாமி புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் (45), இவரது தாய் மாமாவான சாமிநாதன் (58), பிரபு (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஒரு மாருதி ஆம்னி வேனை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கடந்த 2023ல் திருப்பூர் மாவட்டத்தில் இதே போன்று ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பாக ரமேஷ் மற்றும் சாமிநாதன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.