Skip to main content

'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' இது தமிழ்தானா?- குஜராத்தில் நடந்த தமிழ் கொலை

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
statue of unity


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இன்று குஜராத்தில் பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக உயரிய சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைக்கு ’ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்படியென்றால் தமிழில் இதன் மொழிப பெயர்ப்பு ஒற்றுமையின் சிலை என்பதாகும்.
 

ஆனால், இந்த சிலைக்கு வைக்கப்பட்டுள்ள ஆங்கில பெயரை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்காமல் அதே ஆங்கில உச்சரிப்பை வைத்துள்ளனர். அந்த மற்ற மொழி உச்சரிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழிக்கான உச்சரிப்பும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ’ஸ்டேச்சு ஆப் யூனிட்டி’ என்று சரியான உச்சரிப்பில் அச்சிடாமல் ’ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று மோசமான தமிழ் உச்சரிப்பில் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்