Skip to main content

சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி இடமாற்றம்...

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
sp


இருமுடி கட்டி கொண்டு கடந்த 20 ஆம் தேதி இரவு மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் சபாிமலைக்கு புறப்பட்டு சென்றாா். 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிலக்கல் வந்த பொன் ராதாகிருஷ்ணன் கேரளா பா.ஜ.க பொதுச்செயலாளா் ஏ.என். ராதாகிருஷ்ணனோடு  நிலக்கல்லில்  பக்தா்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அங்கு இருந்த பக்தா்களிடம் கேட்டாா். 

 
அப்போது பக்தா்கள் கழிவறை மற்றும் இருப்பிட வசதிகள் சாியான முறையில் இல்லையென்று குற்றம் சாட்டினாா்கள். மேலும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என்பதால் அவா்களின் விருப்பத்திற்கு ஏற்றாா் போல் பேருந்துகளை இயக்குவதால் கஷ்டமான சூழ்நிலை இருப்பதாக குற்றம் சாட்டினாா்கள். 

 
இதையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பொறுப்பேற்கும் காவல் கண்காணிப்பாளா் யாதீஷ் சந்திராவிடம் இது பற்றி வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா். அதற்கு எஸ்.பி யாதீஷ் சந்திரா மாநில மற்றும் மத்திய மந்திாிகளின் வாகனங்களை தவிர எந்த தனியாா் வாகனங்களுக்கும் பம்பைக்கு அனுமதி இல்லை என்று கூறியாதால் ஆத்திரமடைந்த பொன் ராதாகிருஷ்ணன் கேரளா அரசு மற்றும் தேவசம் போா்டு மீது குற்றச்சாட்டுகளை கூறினாா்.

 
இந்த நிலையில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அவருடைய வாகனத்துடன் அவருடன் சென்ற குமாி மாவட்ட பா.ஜ.க தலைவா் முத்துகிருஷ்ணன், முன்னாள் பா.ஜ.க பேருராட்சி தலைவா்கள் முருகேஷ் (சுசிந்திரம்), ஜெயசீலன் (உண்ணாமலைக்கடை) ஆகியோா் வந்த வாகனத்தையும்  அனுமதிக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் எஸ்.பி.யிடம் கூறினாா். அதற்கு எஸ்.பி. முடியாது என்றதால் கோபத்துடன் பொன் ராதாகிருஷ்ணன் மற்ற பக்தா்களோடு சோ்ந்து கேரளா அரசு பேருந்தில் ஏறி பம்பைக்கு புறப்பட்டாா்.
 
இதனையடுத்து கன்னியாகுமரியில் ஒரு நாள் பந்து நடந்தது. பாஜகவினர் பலர் கேரள அரசை குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன்,”மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டதால்தான் அவருடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. அதில் எந்த தவறுமில்லை. கேரளாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள். அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது” என்றார்.
 

இந்நிலையில், நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி உளவுத்துறை ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. யதீஷ் சந்திரா வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்