Skip to main content

இந்தியாவில் சைபீரிய புலி வாழ்வது கண்டுபிடிப்பு; புகைப்பட ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது...

Published on 03/12/2018 | Edited on 03/12/2018

 

tig

 

ரஷ்யா மற்றும் வடக்கு சீன பகுதிகளில் காணப்படும் சைபீரிய புலி வகை இந்தியாவில் வாழ்வது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மூலம் தற்பொழுது இந்த வகை புலிகள் இந்தியாவில் இருப்பது புகைப்பட ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் கிழக்கு இமயமலை பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1997 ல் ரஷ்யாவிலிருந்து 2 சைபீரிய புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. 2011 ஆம் ஆண்டில் அவை இறந்ததுடன் இந்த புலி இனம் இந்தியாவில் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த புலி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்