
மும்பையில் ஓடும் ரயிலில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார் கண் தெரியாத 15 வயது சிறுமி ஒருவர். மும்பை ததார் பகுதியிலிருந்து கல்யாண் பகுதிக்கு செல்ல டிக்கெட் எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான காம்பாட்ர்ட்மென்டில் சிறுமியும் அவரது தந்தையும் எறியுள்ளனர். இவர்களுக்கு பின்னர் மாற்றுத்திறனாளியல்லாத 24 வயதுள்ள ஒரு இளைஞரும் எறியுள்ளார். ரயில் நகர தொடங்கியவுடன் அந்த இளைஞர் சிறுமியை தகாத இடங்களில் தொட முயற்சிசெய்துள்ளார். இதனை உணர்ந்த அந்த சிறுமி தன தந்தை உட்பட அனைவருக்கும் கேட்கும்படி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கண்டு தப்பிச் செல்ல முனைந்த அந்த இளைஞனை அந்த சிறுமி அடித்து கீழே வீழ்த்தியுள்ளார். மேலும் அடுத்த ரயில்நிலையம் வரும்வரை அந்த இளைஞனை விடாமல் பிடித்து வைத்துள்ளார். பிறகு அடுத்த ரயில் நிலையத்தில் போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது, ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தது என இரு வழக்குகள் அந்த இளைஞன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாக செயல்பட்டதாகவும், அவர் கற்று வைத்திருந்த கராத்தே தற்காப்புக்கலை அவருக்கு உதவியாக இருந்ததாகவும் கூறினர். மேலும் அனைத்து பெண்களும் இது போன்ற தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என கூறினர்.