அண்மையில் சமூக வலைத்தளங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்துடன் ஆபாசமாக உடை அணிந்த பெண் ஒருவர் லிப்ட் ஒன்றுக்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ராஷ்மிகா மந்தனா எனப் பலரும் கருதி கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் அது ஏஐ டீப் பேக் (AI DEEP FAKE) எனும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று தெரிய வந்ததோடு, அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண்ணின் வீடியோவும் வெளியிடப்பட்டது.
மேலும், வீடியோவில் இருப்பது ராஷ்மிகா மந்தனா இல்லை என்பதும் பிரிட்டிஷ் இந்திய பெண் ஒருவரின் வீடியோவை ஏஐ டீப் ஃபேக் தொழில் நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று சித்தரித்து பரப்பப்பட்டது தெரியவந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.