Published on 24/08/2018 | Edited on 24/08/2018

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாளான ரக்சா பந்தன் நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) கொண்டாடப்படவிருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த விழா அதிகமாக கொண்டாடப்படும். அந்நாளின் போது பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு மற்றும் சகோதரராக நினைக்கும் ஆண்களுக்கு கையில் ராக்கி கட்டி தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் ரக்சா பந்தன் அன்று டெல்லியில் உள்ள பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை பெண்கள் டெல்லி மாநகரில் உள்ள அரசு பஸ்கள் ஏசி பஸ்கள் என அனைத்திலும் பெண்கள் இலசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது டெல்லி அரசு போக்குவரத்து கழகம்.