மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 16 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய கிஸான் யூனியன் என்ற விவசாய சங்கத்தினர், "மத்திய அரசு எங்களின் 15 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும்போது, வேளாண் சட்ட மசோதாக்கள் தவறு என்றுதானே அர்த்தம். பிறகு ஏன் அந்த சட்டங்களை அழிக்க கூடாது. நாங்கள், குறைந்தப்பட்ச ஆதரவிலைக்கு ஒரே சட்டம் வேண்டுமென கோரிக்கை வைத்தோம். ஆனால் மத்திய அரசு, 3 மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டுவந்துள்ளனர் என கூறியதோடு, எங்கள் போராட்டம் அமைதியாக தொடரும் எனவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், பாரதிய கிஸான் யூனியன் (பனு) அமைப்பு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வழக்கில், வாதாடுவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.