Published on 20/07/2018 | Edited on 20/07/2018
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முன்னதாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ராகுல் காந்தி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ராகுல் காந்தி பேசும் போது, பாஜக உறுப்பினர்கள் கடும் அமளி செய்தனடர். பிரதமர் மோடி மவுனமாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தார்.
ராகுல்காந்தி பேசி முடித்ததும், பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றார். தன்னை நோக்கி ஏன் வருகிறார் என்று மோடியும், பாஜக உறுப்பினர்களும் சற்று அமைதியாகவே இருந்தனர். ராகுல்காந்தி கட்டியணைத்ததும் மோடிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கட்டியணைத்துச் சென்ற ராகுல்காந்தியை அழைத்த மோடி கைக்குலுக்கி அனுப்பினார். ராகுல்காந்தியின் செயல் அனைவரையும் கவர்ந்தது.