Skip to main content

நான் தயார்... ஆளுநரை விடாது துரத்தும் ராகுல்காந்தி...

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத்தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

rahul gandhi reply to jammu kashmir governor

 

 

காஷ்மீரில் நிலவி வரும் சோஹல் குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்,  காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், வன்முறைகள் நிகழ்வதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். மேலும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள, ராகுல் காந்தியின் பயணத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயாராக இருக்கிறோம். அவர் காஷ்மீரின் உண்மையான நிலையை இங்கு வந்து பார்த்து அறிந்து கொண்டு அதன் பின் கருத்து தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, உங்கள் அழைப்பை ஏற்று காஷ்மீர்  வர நான் தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய  குழுவினருடன் நான் வருகிறேன். எங்களுக்கு விமானம் எதுவும் தேவையில்லை. அதற்கு பதிலாக  மக்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்க சுதந்திரம் கொடுத்தால் போதும்” என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவருக்கு விடுத்த அழைப்பையும் திரும்ப பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், ஆளுநரின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள ராகுல், "உங்களது பதிலை பார்த்தேன். எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர நான் தயாராக இருக்கிறேன். நான் எப்போது வரட்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்