sea

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அருகில் கடல் சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. அங்குள்ள பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பாசியின் மீது நின்று செல்பி எடுத்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கும் மக்களை கரைக்கு திரும்ப காவலர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்செந்தூர் பகுதியில் இதேபோல் கடல் சுமார் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கி இருந்த நிலையில் இன்றும் கடல் மீண்டும்உள்வாங்கி இருப்பதுஅங்குள்ளபக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.