தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதனைத் தொடந்து, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து பினராயி விஜயன் இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேலும் அவர் தலைமையிலான 21 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்றுக்கொண்டது. இந்த அமைச்சரவையில் கேரளாவில் உள்ள இந்துக்கோவில்களை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தவரான கே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன.