Skip to main content

அதிகரிக்கும் கரோனா - பொதுபோக்குவரத்தை இரத்து செய்த மாநிலம்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

ahmedabad

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலிலும், இந்தூரிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் 31ஆம் தேதி வரை ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள உயிரியல் பூங்கா, தோட்டங்கள் ஆகியவற்றை மறுஉத்தரவு வரும்வரை மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

 

இந்தநிலையில் குஜராத்தில், மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று (17.03.2021) ஓரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அகமதாபாத் நகரில் பொதுப்போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தாமதப்படுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை தான் உருவாகும்' - போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்  

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'If we keep delaying, the problem will arise here again' - Transport Workers' Union interviewed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று  தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.