Skip to main content

’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ - திமுகவிடம் ஒரண்டை இழுக்கும் அதிமுக!

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
Pondycherry


புதுச்சேரியில் ஆளுநர் தலையீட்டை தடுக்க மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், 'பாஜகவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும். பாஜகவில் உள்ள மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரி வாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா? என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தனி மாநில அந்தஸ்து கோராத நிலையில் தற்போது நாடகம் ஆடுவதாக அதிமுக குற்றசாட்டியுள்ளது.
 

pdy-MLA ANBAZHAGAN.2


இதுகுறித்து புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம், "மத்தியிலும் மாநிலத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெறுவது சம்பந்தமாக எந்தவொறு சிறு நடவடிக்கையும் திமுக எடுத்தது இல்லை. தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற நிலையை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுத்து வருகின்றது.

இதில் ஆளும் அரசு ஒரு நிலைபாட்டை எடுத்து வரும் சூழ்நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற தனிநபர் தீர்மானங்களின் உண்மை நிலையை மூடி மறைத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மக்களிடையே ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற விதத்தில் மாநில அந்தஸ்து சம்பந்தமாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பது போன்ற தவறான தகவலை தெரிவத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை" என்று கூறியுள்ளார்.

எந்த விவகாரத்திலும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை என்பதையே அ.தி.மு.கவின் போட்டா போட்டி பேட்டி உணர்த்துவதாக புலம்புகின்றனர் புதுச்சேரிவாசிகள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
ADMK ex-minister's bail plea adjourned

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்படிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று (03.07.2024) நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனு மீதான விசாரணை நாளை (04.07.2024) ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். 

Next Story

“தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை” - சசிகலா பேச்சு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil police are not working properly" - Sasikala speech

தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை எனச் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக போலீசார் சரியாக செயல்படவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது அவர் ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா புகைப்படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்” எனத் தெரிவித்தார்.