இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் வகையில் "பிஎம்.நரேந்திரமோடி" என்னும் பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் முன்னணி நடிகரான விவேக் ஓப்ராய் அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான "பண்டித்" அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா , கனடா உள்ளிட்ட 38 நாடுகளில் சுமார் 1700 திரையரகங்களில் திரைப்படம் வெளியாகும் எனவும் , இந்தியாவில் மட்டும் சுமார் 600 திரையரகங்களில் வெளியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆங்கிலம் , ஹந்தி , தெலுங்கு உட்பட 23 மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிஎம் நரேந்திரமோடி படத்திற்கு எதிராக வழக்கு !
உச்சநீதிமன்றத்தில் பிஎம் நரேந்திரமோடி படத்தின் வெளியீட்டிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளானர். இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் முறையீட்ட எதிர்கட்சிகள் படத்தை வெளியீட எவ்வித தடையும் இல்லை என தெரிவித்ததை அடுத்து , எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (08/04/2019) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் தலைமையிலான அமர்வு முன் வருகிறது. அதே போல் படத்தின் வெளியீட்டு தேதியை படத்தயாரிப்பு நிறுவனம் இரண்டு முறை மாற்றி தற்போது ஏப்ரல் 11 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நடிகரான விவேக் ஓப்ராய் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்பது குறித்த போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த திரைப்படம் தொடர்பான வழக்கு இன்று (08/04/2019) விசாரணைக்கு வரவுள்ளதால் பட வெளியீட்டு தேதி மாற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படம் வெளியீட்டு தேதியை மாற்றம் செய்ய படத்தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ் , சேலம் .