Skip to main content

குழந்தையின் உயிரை காக்க 6 கோடி வரியை ரத்து செய்த பிரதமர் மோடி!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

pm modi

 

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தீரா காமத் என்ற ஐந்து வயது குழந்தைக்கு மரபணு ரீதியிலான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்தக் குழந்தைக்கு சிகிச்சையளிக்க, அமெரிக்காவிலிருந்து 16 கோடி மதிப்புள்ள மருந்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கான பணத்தை அக்குழந்தையின் பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) மூலமாக திரட்டினார். மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து பெற்றோர், பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு 6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. மும்பை முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குழந்தையின் பெற்றோர் மேற்கொண்டு பணம் செலவழிக்க முடியாமல் இருப்பதால், ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு எழுதினார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, உயிர்காக்கும் மருந்துக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

 

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அரிதான மரபணு நோய்க்கான மருந்து குறித்து. வெளிநாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான மருந்து சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. அதிக விலை கொண்ட அம்மருந்து இந்திய மக்கள் மற்றும் பிரதமரின் அன்பால் அக்குழந்தைக்குக் கிடைக்க இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்