Published on 30/06/2021 | Edited on 30/06/2021

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இணைய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இணைய இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் குடிமக்களுக்கு அரசு சேவைகளை மின்னணு முறையில் கிடைக்கச் செய்வதற்காகவும், தொழில்நுட்பக் களத்தில் நாட்டை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்காகவும் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நாளையுடன் (ஜூலை 1) 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி டிஜிட்டல் இந்தியா பயனாளர்களோடு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.