Skip to main content

அதிநவீன பாதுகாப்பு வசதிகள்; 12 கோடி மதிப்பு - பிரதமர் மோடியின் புதிய கார்

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

pm modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது மெர்சிடிஸ் - மேபேக் எஸ்650 என்ற புதிய காரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இம்மாத தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோதிலிருந்து பிரதமர் மோடி மெர்சிடிஸ் - மேபேக் எஸ்650 காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

12 கோடி மதிப்பிலான இந்த கார் நவீன வசதிகளை உள்ளடக்கியது. மேலும் குண்டுகளால் துளைக்க முடியாத வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் சக்தி வாய்ந்த டிஎன்டி வெடிபொருள் காரிலிருந்து 2 மீட்டரில் வெடித்தாலும், இந்த காரில் பயணிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

வாயு தாக்குதல் நடத்தப்பட்டாலும், காரில் உள்ளவர்கள் சுவாசிக்க பிரேத்தேயக காற்று வசதி உள்ளது. பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோவை பயன்படுத்தி வந்தார். முதல்முறையாக 2014ஆம் ஆண்டு பிரதமர் ஆனதும் பிஎம்டபிள்யூ 7 செரிஸ் 760லி ஹை செக்யூரிட்டி எடிஷன் காரை பயன்படுத்தத் தொடங்கினார். அதன்பின்னர்  ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் குரூசர் ஆகிய கார்களை பயன்படுத்தி வந்த பிரதமர் மோடி தற்போது மெர்சிடிஸ் - மேபேக் எஸ்650க்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்