Published on 09/10/2020 | Edited on 09/10/2020

இறந்த மத்திய அமைச்சர் பஸ்வான் வகித்துவந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். டெல்லி மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார். பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் ராம்விலாஸ் பஸ்வான் வகித்துவந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.