பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014ஆம் ஆண்டில் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை 2014ஆம் ஆண்டில் விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம், மூலவழக்கின் விசாரணை முடிந்த பிறகு, இந்த மனுவை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார்.
7 பேர் விடுதலை தொடர்பான மூல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை காலை 10. 45 மணிக்கு விசாரிப்பதாக இருந்தது. ஆனால், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததாலும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதாலும் இவ்வழக்கை உச்சநீதிமன்றம் மூன்று வாரம் ஒத்திவைத்துள்ளது.