Published on 15/08/2019 | Edited on 15/08/2019
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
![paistan army in jammu kashmir border](http://image.nakkheeran.in/cdn/farfuture/M_yd9v63Dv1SckNgu-g5Cv4YSKAbBhj_6oClKDZQTkE/1565869537/sites/default/files/inline-images/militr.jpg)
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு இரு நாடுகளுக்குமிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் பல உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் உலக அரங்கில் பாகிஸ்தானின் முயற்சிகள் பெருமளவு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், இந்தியாவின் சுதந்திர தினமான இன்று பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த இடீர் தாக்குதலையடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.