Published on 23/09/2020 | Edited on 23/09/2020

நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றப்படத்தற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸின் மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத், மசோதா தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும். அரசியலமைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.