20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்புகளை நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த திட்டத்திற்கான இரண்டாவது கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிட். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கடனை செலுத்துவதற்கான காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படும். விவசாயிகளுக்கான திட்டங்கள் பின்னர் வெளியிடப்படும். விவசாயிகள் சிரமப்படாமல் இருக்கவே கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 29 ஆயிரத்து 500 கோடி என்றார்.
கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நிதி 4,200 கோடி. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் 11,002 கோடி. கரோனா காலத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு செய்யப்பட்ட செலவு பத்தாயிரம் கோடி. தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
சொந்த மாநிலம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தொழிலாளர்களை கண்டுபிடித்து புதிய பணிகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க ஒரு தேசிய அளவிலான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் இஎஸ்ஐ வழங்குவது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆபத்தான பணிகளை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்றார்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்க 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி அல்லது கோதுமை 5 கிலோ ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் .ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவு பொருட்கள் கிடைக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 83% அமல்படுத்தப்படும் என்றார்.
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு ஐயாயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 வரை கடன் வழங்குவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
70 ஆயிரம் கோடி புதிய மலிவுவிலை வீடு முதலீடுகள் செய்யப்படும். மலிவுவிலை வீடுகளை வாங்குவதற்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். மானியம் அளிப்பதால், 2.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. கிசான் கிரடிட் கார்டு திட்டத்தின் மூலம் 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். முத்ரா திட்டத்தின் வட்டிச்சலுகைக்காக செய்யப்பட உள்ள செலவு 1,500 கோடி ஆகும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நபார்டு வங்கி மூலம் 30 ஆயிரம் கோடி. ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 6ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.