Skip to main content

நவ.30 வரை பொதுமுடக்கம்; மாநிலங்களுக்கிடையே இ-பாஸ் தேவையில்லை -மத்திய அரசு அறிவிப்பு

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

No e-pass required between states -central Government announcement

 

 

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் வருகிறது.

 

முன்னதாக மாவட்டங்களுக்கு இடையேயான இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கிடையே செல்ல தனி அனுமதி, அதிகாரி ஒப்புதல், இ-பாஸ் அவசியமில்லை. அதேபோல் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 30 இல் வெளியிடப்பட்ட கட்டுப்பாடு நவம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே ஊரடங்கு பிறப்பிக்கக்கூடாது எனவும் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்