Published on 05/11/2021 | Edited on 05/11/2021
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் படிப்படியாக குறைந்துவருகிறது. தொற்று உச்சத்தில் இருந்தபோது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் தளர்த்திவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் தினசரி கரோனா பாதிப்பு 250 ஆக குறைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் இரவுகளில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியே செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.