Published on 02/05/2019 | Edited on 02/05/2019
மகாலு-பருண் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மலையேற்றம் மேற்கொண்ட போது 32 அங்குலம் நீளமும், 15 அங்குலம் அகலமும் உடைய ராட்சத காலடி தடம் ஒன்றை கண்டறிந்தனர். இந்த காலடி தடமானது பனி மனிதனின் காலடி தடமாக இருக்கலாம் என இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது.

இந்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த விளக்கத்தை நேபாள அதிகாரிகள் அளித்துள்ளனர். இந்த காலடித்தடங்களை இந்திய ராணுவம் கண்டுபிடித்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட நேபாள அதிகாரிகள், அந்த காலடித்தடம் பணிகரடியுடையது என்றும், பனிமனிதனுடையது கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.