Skip to main content

3 திருத்தங்களுடன் முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றம்!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
muththalaak

 

 

 

முத்தலாக் எனப்படும் விகாரத்து முறைக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்படவுள்ளது. ஆனால் முத்தலாக் மசோதா ஆண்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. இதன் காரணமாக மூன்று திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று மாநிலங்கவையில் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

முத்தலாக்கில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு முன்ஜாமீன் கிடையாது என்ற அம்சம் மாற்றப்பட்டு மனைவியிடம் கருத்து கேட்கப்பட்டபின் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம். அதேபோல் மனைவிக்கு இழப்பீடு தர கணவர் சம்மதித்த பிறகு ஜாமீன் வழங்கலாம்.

 

முத்தலாக் விவகாரத்தில் பக்கத்து வீட்டார் புகார் கொடுத்தால் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்சம் மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டவரின் ரத்த சொந்தங்கள் மட்டும்தான் புகார் தெரிவிக்க முடியும் எனவும் மாற்றப்பட்டுள்ளது. கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மூன்று திருத்தங்களுக்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. அதேபோல் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்