இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ பதிலளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், எல்லையில் நடக்கும் ஊடுருவல் சம்பவங்கள் குறித்து இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அப்பதிலில் கடந்த இரண்டு வருடங்களில் (இந்தாண்டு ஜனவரி வரை) பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சம்பவங்கள் 61 முறை நிகழ்ந்ததாகக் கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலின்படி, கடந்த இரண்டு வருடங்களில், பாகிஸ்தானை விட வங்கதேசத்திலிருந்து அதிகமுறை இந்தியாவிற்குள் ஊடுருவல் நடந்துள்ளது. 1,045 தடவை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவல் சம்பவம் நடந்துள்ளது. 63 தடவை நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.