Published on 27/03/2019 | Edited on 27/03/2019
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. காலை 11.45 முதல் 12 மணி வரை பேச போவதாக அறிவித்துள்ள அவர், இன்னும் மக்கள் மத்தியில் உரையாற்றவில்லை என்பதால் மக்கள் அவர் எப்போது ஊரையாற்றுவார் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துக்கொண்டுள்ளனர்.
![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/UPSWJhUN-R8YTIDVMrdoh4GPQfmVptIlwzXCsJ90a3s/1553669354/sites/default/files/inline-images/narendra-modi_pti.jpg)
முக்கியமான விஷயம் குறித்து மக்களிடம் பேச இருப்பதாகவும், தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்களில் தனது உரையை பார்க்குமாறு மோடி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் துவங்க இன்னும் இருவாரங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.