Published on 26/10/2019 | Edited on 26/10/2019
கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து யாருக்கும் பெறும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் 5 பேரும், ஜனநாயக ஜனதா கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து பாஜக எம்எல்ஏகள் கூட்டம் சண்டிகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் மனோகர்லால் கட்டார் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஆளுநரை சந்தித்து கட்டார் மீண்டும் ஆட்சியமைக்க உரிமைகோருகிறார். அவர் நாளை பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.