Skip to main content

நண்பரின் தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபர்; அடித்தே கொன்ற குடும்பத்தினர்!

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

Man beaten to passed away who had an inappropriate relationship with friend's mother in bihar

நண்பரின் தாயுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த நபர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம், சிதாமார்கி பகுதியில் உள்ள சிக்னா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா குமார் (22). இவர், டெல்லியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். தனது நண்பரிடன் வீட்டிற்கு பார்சல் போடுவதற்காக அடிக்கடி அங்கு சென்ற ராஜா குமாருக்கு, நண்பரின் தாயார் வித்யாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம், வித்யாவின் கணவர் ஜெக்தீஷ் ராய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, வித்யா வீட்டிற்கு சென்ற ராஜா குமாரை, வித்யாவின் குடும்பத்தினர் பயங்கரமாக அடித்துள்ளனர். கொடூரமாக தாக்கியதில், ராஜா குமார் படுகாயமடைந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த ராஜா குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜா குமார், திடீரென்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வித்யா, அவரது கணவர் ஜெக்தீஷ் ராய் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்