Skip to main content

இந்த இரண்டில் ஒன்று நடந்தால் ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிக்கும் -மஹாராஷ்ட்ரா சுகாதாரத்துறை தகவல்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

maharashtra

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. முதல் இரண்டு அலைகளிலும் நாட்டிலேயே கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்ட்ராவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

இதில் மும்பையில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கரோனா பாதிப்புகள், அடுத்த மாத நடுப்பகுதியில் உச்சத்தை அடையாளம் என்றும், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் குறைய தொடங்கலாம் எனவும் மஹாராஷ்ட்ரா சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 

மேலும் மஹாராஷ்ட்ரா சுகாதாரத்துறை, "தற்போது ஊரடங்கு விதிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை. மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜனின் ஒருநாள் தேவை 800 மெட்ரிக் டன்னை தாண்டினாலோ, மருத்துவமனைகளில் 40 சதவீத படுக்கைகள் நிரம்பினாலோ மஹாராஷ்ட்ரா அரசு, ஊரடங்கு குறித்தோ அல்லது ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் குறித்தோ பரிசீலிக்கும்" என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்