Published on 04/08/2021 | Edited on 04/08/2021

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மேலும், தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய, ஆகஸ்ட் 11 முதல் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.