கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் திடீர் தேர்தல் வரலாம் என இன்று காலை தேவகவுடா கூறியிருந்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்தை தற்போது குமாரசாமி மறுத்துள்ளார்.
இன்று காலை பேட்டியளித்த தேவகவுடா, "மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்கள் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டணி ஆட்சி நீடிப்பது சந்தேகம் தான்" என தெரிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் என்ற தேவகவுடாவின் கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தங்களது ஆட்சி 4 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்றும், மாநகராட்சித் தேர்தல் குறித்து தேவகவுடா கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.