Published on 09/08/2020 | Edited on 09/08/2020
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கேரளா மூணாறு, பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள 32 பேர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.