Skip to main content

கேரள கனமழை 8000கோடிக்கு சேதம், 39 பேர் உயிரழப்பு-பினராயி விஜயன்  

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
kerala

 

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவினாலும் இதுவரை 39 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் கனமழையால் சுமார் 8000கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

மேலும், உடனடி நடவடிக்கை எடுக்க 400கோடி நிதி வேண்டும் என்றும்  மத்திய உள்துறை மந்திரியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும். மாநில அரசு மத்திய அரசிடம் தேவையான நிதியை நான்கு வாரத்தில் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, மல்லபுரம் ஆகிய மாவட்டங்கள்  கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.    

      

சார்ந்த செய்திகள்