Published on 19/12/2019 | Edited on 19/12/2019
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உளவுத்துறை, உள்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரு மாநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20.12.2019) விடுமுறை விடப்படுவதாக காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விடுமுறை என்று தெரிவித்துள்ளார்.