Skip to main content

மூன்று மாநில சட்டசபை தேர்தல்; யார் யார் முன்னிலை?

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

nn

 

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.

 

மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்குப் பிறகான இந்தத் தேர்தலின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது காங்கிரஸ். அதேபோல் தீவிரப் போட்டியில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.

 

காலை 8.30 நிலவரப்படி திரிபுராவில் பாஜக 22 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், திப்ரா 12 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மேகாலயாவில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், என்.பி.எப் 28 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. நாகாலாந்தில் பாஜக 20 இடங்களிலும், என்.பி.எப் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'மூன்றாவது முறையாக பிரதமராவது மிகப்பெரிய சாதனை'-ரஜினிகாந்த் பேட்டி

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
'Being Prime Minister for the third time is a great achievement' - Rajinikanth interview

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று  பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தும் நடைபெற இருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷரிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். விளையாட்டு, சினிமா பிரபலங்கள், மதத்தலைவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானம், உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

மோடி பதவியேற்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்பொழுது டெல்லி கிளம்பி உள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ''மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டு. மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

Next Story

'இலக்கை எட்ட முடியாதது ஏன்?' - பாஜக தலைமை ஆலோசனை

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
'Why is the target unattainable?'- BJP leadership advises

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தன்னுடைய இலக்காக நிர்ணயித்த 400 தொகுதிகளை எட்ட முடியாதது ஏன் என்பது தொடர்பாக பாஜக தலைமை ஆலோசிக்க முடிவெடுத்திருந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் இல்லத்தில் இது தொடர்பான ஆலோசனை தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பிட்ட இலக்கான 400-ஐ எட்ட முடியாதது ஏன்? சரிவுக்கு காரணம் என்ன? பாஜகவின் மிகவும் பலம் வாய்ந்த தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த முறையைவிட பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். இதற்கான காரணங்கள் என்ன? மகாராஷ்டிராவிலும் கடந்த முறை வந்த எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் வெற்றி கிடைத்திருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.