Skip to main content

5 துணை முதல்வர்களை தொடர்ந்து, அதிரடி திட்டத்தை அறிவித்த ஜெகன்மோகன்...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜெகன்மோகன் முதலமைச்சாரானார்.
 

jaganmohan


ஆட்சியேற்ற நாளிலிருந்தே அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார் ஜெகன்மோகன். அதன்படி, அவர் தற்போது மாவட்டங்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார். 13 மாவட்டங்களைக்கொண்ட ஆந்திராவை 25 மாவட்டங்களாக பிரிக்க பணிகள் தொடங்கியுள்ளன. 

வருவாய், மேம்பாடு மற்றும் நிர்வாக வசதிக்காக 25 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். துணை முதல்வரும், வருவாய்த் துறை அமைச்சருமான பில்லி சுபாஷ் சந்திரபோஸ், “முதல்வர் ஜெகன்மோகன் ஒவ்வொரு திட்டத்தையும் சரியான முறையில் கையாண்டு வருகிறார். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாவட்டங்கள் பிரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

ஜெகன்மோகன் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாத யாத்திரையில் இருந்தார். அப்போது முதல்வராக நான் பதவியேற்றால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அதற்கான பணியை தொடங்கிவிட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்