Skip to main content

"நானும், எனது நாடும் கவலைகொள்கிறோம்"- இர்பான் பதான் உருக்கம்....

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.

 

irfan pathan about jamia student protest

 

 

இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், "அரசியல் பழிவாங்கும் விளையாட்டு எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நானும் எனது நாடும் ஜாமியா மிலியா மாணவர்களை எண்ணிக் கவலை கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்