Published on 20/08/2018 | Edited on 20/08/2018
ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கிவிட்டதாக கடந்த சனிக்கிழமை வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் கூடுதலாக, வால்மார்ட் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பிற்குப் பிறகு ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகள் வால்மார்ட்டிடமும் மற்றும் மீதமுள்ள பங்குகள் ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனரான பின்னி பன்சாலிடமும், டென்சென்ட், டைகர் குளோபல் மற்றும் மைக்ரோசாப்ட் கிராப் ஆகிய நிறுவனங்களிடமும் உள்ளது. வால்மார்ட் நேரடியாக இந்தியாவில் தனது சில்லரை வணிகத்தைத் தொடங்க தடைகள் இருந்தாலும் இந்த நடவடிக்கை மூலம் வேறு வழியாக உள்ளே வருகின்றது என்று சொல்லலாம்.