Skip to main content

ஒரு மாதத்திற்கு 4 ஜிபி-ல் இருந்து இன்று ஒரு நாளைக்கு 1 ஜிபி...!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

நீல்சன் என்னும் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஃபோன்களைப் பற்றி ’நீல்சன் இந்தியா ஸ்மார்ட் ஃபோன் ரிப்போர்ட் 2018 என்னும் ஆய்வை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முடிவில் ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாளைக்கு 1 ஜி.பி டேட்டா உபயோகப்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே, சில வருடங்களுக்கு முன் மாதத்திற்கே 4 ஜி.பி அளவிற்குத்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீல்சன் இந்தியா பிரிவின் இயக்குனர் அபிஜித் மாட்கர் கூறுகையில் "4ஜியின் வளர்ச்சி, குறைந்த விலையில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் ரீ-சார்ஜ் விலையில் மாற்றங்கள் போன்ற விஷயங்களால் இந்தியா முழுக்க ஸ்மார்ட் ஃபோன்கள் சென்று சேருவதை எளிமையாக்கியிருக்கிறது" என்று தெரிவித்தார். 

 

nn

 

இந்த ஆய்வின் முடிவு முக்கியமாக எந்தெந்த செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதில்  சாட் (chat) மற்றும் பிரௌசர் ஆகிய இரண்டு செயலிகளே அதிக அளவில் பயன்படுத்துவதாகவும். அடுத்தது டேட்டாக்களில் யூடோரென்ட் (uTorrent) என்னும் படங்களை தரவிறக்கம் செய்யும் செயலி மூலமாகதான் அதிக அளவு டேட்டா செலவிடப்படுகிறது என்றும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளுக்கு, ஆன்லைனில் மட்டும் சராசரியாக 90 நிமிடங்கள் செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக கடந்த 18 முதல் 15 மாதங்களில் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் பிரௌசர்களில் அதிக அளவு டேட்டாக்களை செலவிட்டுள்ளதாகவும் நீல்சன் ரிப்போர்ட் தெரிவித்துள்ளத்து. 

 

சார்ந்த செய்திகள்